ஆழியாறு அணையில் இருந்துவரும் 6-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆனைமலை வட்ட பாசனத்துக்காக ஆழியாறு அணையில் இருந்து வரும் 6-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, நவம்பர் 6-ம் தேதி முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 15-ம் தேதி வரை 160 நாட்களுக்கு ஆழியாறு அணையில் இருந்து 1,137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும். இதனால், கோவை, ஆனைமலை வட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்