பழங்கால சிலையுடன்சுற்றிய இருவர் கைது

By செய்திப்பிரிவு

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸார், எஸ்.ஐ. சிவக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்குள்ள தெலுங்கு வீதியருகே நின்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்கள் சலீவன் வீதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(36), செல்வபுரத்தைச் சேர்ந்த பாலவெங்கடேஷ்(36) எனத் தெரிந்தது. இவர்களிடம் இருந்து பழங்கால ஐம்பொன் சாமி சிலையின் கை பாகம் மட்டும் மீட்கப்பட்டது. இதன் எடை 200 கிராம் ஆகும்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் எலக்ட்ரீசியனாக உள்ளார். தங்கம் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.

திருநாவுக்கரசு, ஜெயச்சந்திரன், பாலவெங்கடேஷ் ஆகியோர் நண்பர்கள். திருநாவுக்கரசு தன்னிடம் உள்ள சாமி சிலைகளை விற்பனை செய்ய கோவைக்கு கொண்டு வந்துள்ளார். மூவரும் சேர்ந்து ஆலோசித்தபோது போலீஸாரிடம் சிக்கினர். அதில் திருநாவுக்கரசு ஓடிவிட்டார். ஜெயச்சந்திரன், பாலவெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிலை எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்