தீபாவளி பண்டிகையை முன்னிட்டு‘ஆவின்’ இனிப்பு விற்பனை தொடக்கம்

By செய்திப்பிரிவு

கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை பச்சாபாளையத்தில் உள்ள ‘ஆவின்’ நிறுவனம் சார்பில், இனிப்பு வகைகள் விற்பனை நேற்று தொடங்கியது. கோவை ‘ஆவின்’ தலைவர் கே.பி.ராஜூ விற்பனையை தொடங்கி வைத்தார். பாம்பே பாதாம் அல்வா, சாக்லேட் நட்ஸ் பர்பி, மைசூர் பாகு, பாம்பே முந்திரி அல்வா, சாக்லேட் காஜூ கட்லி, பிஸ்தா நட்ஸ் பர்பி, காஜீ கட்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை உக்கடம், காந்திபுரம், வஉசி பார்க், ஆர்.எஸ்.புரம், பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும். மேலும், ஆவின் மொத்த விற்பனையாளர்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமார், துணைப் பதிவாளர் (பால்வளம்) கணேஷ், உதவிப் பொது மேலாளர் (விற்பனை) சுஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்