திமுக தேர்தல் அறிக்கை குழு சேலம் வருகை பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சேலம்: சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் வரும் 5-ம் தேதி சேலம் வரவுள்ளனர். அவர்களிடம் அனைத்து மக்களும் மனு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவைச் சேர்ந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்பி-க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் வரும் 5-ம் தேதி சேலம் வருகின்றனர். அன்று மாலை 4 மணிக்கு சேலம் ரேடிசன் ஓட்டலில் மக்களிடம் கருத்துகளை நேரடியாக கேட்க உள்ளனர்.

எனவே, சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வணிகர் சங்கங்கள், நெசவாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களது கருத்துகளை, கோரிக்கை மனுக்களாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்