அந்த வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது புகார் செய்த இளைஞரின் வாகனம் என்பது தெரியவந்தது. இந்நிலையில், அவரை காவல் நிலையம் வரவழைத்த போலீஸ்காரர் ஒருவர், ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் வாகனத்தை திருப்பிக் கொடுப்போம் என்று கூற, அவரும் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுத்து இருக்கிறார்.
2 நாட்களுக்குப் பிறகு அந்த இளைஞரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸ்காரர் ஒருவர், மேலும் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த இளைஞர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், லஞ்சம் வாங்கியது அதே காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவில் போலீஸ்காரராக இருப்பவர் என்பது தெரியவந்தது. தன் மீது புகார் கொடுக்கப்பட்டதை அறிந்து கொண்ட அவர், தான் வாங்கிய ரூ.6 ஆயிரத்தை புகார் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago