புதிய ஐ20 கார் முன்பதிவை ஹுண்டாய் தொடங்கியது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றும், அதிக அளவில் கார்களை ஏற்றுமதி செய்துவரும் நிறுவனமுமான ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 2020-ம் ஆண்டு மாடல் ஐ20 கார் முன்பதிவை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சர்வதேச டிசைன் தத்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆல்நியு ஐ20 கார்’ மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்தா மற்றும் அஸ்தா(O) மாடல்களில் பெட்ரோல், டீசல், டர்போ பெட்ரோல் (பிஎஸ்6) இன்ஜினுடன் கிடைக்கிறது.

மொத்தம் 8 வண்ணங்களில் மேனுவல், அட்டோமேடிக், இன்டெலிஜென்ட் மேனுவல் (இந்தபிரிவில் முதல்முறை), இன்டலிஜென்ட் வேரியபிள், 7-ஸ்பீட் டூயல்கிளட்ச் உள்ளிட்ட டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் இவை கிடைக்கின்றன.

இந்த கார்களுக்கான முன்பதிவு கடந்த அக்.28-ம் தேதி தொடங்கிவிட்டது. https://clicktobuy.hyundai.co.in என்ற இணையதளம் மூலம் ரூ.21,000 மட்டும் முன்பணமாக செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம். தேசிய அளவிலான கார் வெளியீட்டு விழா வரும் நவ.5-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.எஸ்.கிம் கூறும்போது, “ஸ்மார்ட்டான இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஹுண்டாய் நிறுவனம் ஸ்மார்ட்டான கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஐ20 கார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. ஸ்டைல், ஒப்பற்ற திறன், சிறந்த தொழில்நுட்பம் மூலம் இந்த கார் பிரீமியம் ஹேட்ச்பேக் வரிசையில் மீண்டும் முத்திரை பதிக்கும்” என்றார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்