மாதவரம் பகுதியில் அடுத்தடுத்து வழிப்பறிகொள்ளையன் கைது

By செய்திப்பிரிவு

அடுத்தடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை, மாதவரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாதவரம் பகுதியில் பெண் செவிலியர் ஒருவரிடம் அண்மையில் செல்போன் பறிக்கப்பட்டது. இதேபோல், கடந்த 29-ம் தேதி இளைஞர் ஒருவரிடம் கத்திமுனையில் செல்போன், பணம் பறிக்கப்பட்டது.

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாதவரம் குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்தனர். சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமும், பறிபோன செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது.

இதில் ஈடுபட்டதாக புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கோபி(24)என்பவரை போலீஸார் கைது செய்தனர்.இவர் தனது நண்பருடன் சேர்ந்து பெண் செவிலியரிடம் செல்போன் பறித்த அன்றே, மண்ணடி பகுதியில் மற்றொரு நபரிடம் செல்போன் பறித்துள்ளதும் தெரியவந்தது. கோபியை கைது செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்