உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கான தானியங்கி இயந்திர நிறுவனம் உள்ளது. இதற்காக பிளாஸ்டிக் பொருள் சேகரிப்பு மையத்தில் சுமார் 75 டன் அளவிற்கு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் திறந்தவெளியில் கொட்டப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு திடீரென சேகரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அனைத்து பொருட்களும் கொழுந்து விட்டுஎரியத் தொடங்கியது. அப்பகுதியில் புகை அதிகமாகி, வசிப்பிடவாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூரிலிருந்து 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்துக் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago