விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி 200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில், மீன் குத்தகை என்ற பெயரில் விவசாயத்திற்கு.
நீர் பாசனத்தை தடை செய்து வருகின்றனர். ஏரியில் நடு மதகு பகுதியினை சேதப்படுத்தி யுள்ளனர்.
ஏரியின் மதகை சரி செய்ய வேண்டும். மீன் குத்தகையை தடை செய்ய வேண்டும்.
சம்பா நடவு பணியை விவசாயிகள் மேற்கொள்ள ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago