புதுச்சேரியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு அந்தந்தப் பகுதியில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாடு மையங்களில் உள்ள பணியாளர்களால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதற்கான கட்டண வரையறை நகராட்சியால் மேற்கொள்ளப்படாத நிலையில், ஒவ்வொருவரிடம் இஷ்டத்திற்கு அவர்கள் கட்டணம் வசூலித்து வந்தனர்.
அதிகபட்சமாக ரூ.1,500 வரை வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசின் உத்தரவுப்படி புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் இருமடங்காக அதிரடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
உடல் அடக்கத்திற்கு ரூ.4 ஆயிரம் கட்டணம்
அதன்படி இனிமேல் ஒரு சடலத்தை தகனம் செய்வதற்கு (எரிவாயு - மின்சாரம் மூலம்) ரூ.2,500, விறகு மூலம் தகனம் செய்ய ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.6 அடி குழி தோண்டி சடலத்தை அடக்கம் செய்ய ரூ.4 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்துள்ள நகராட்சி, ஆழ்குழி தோண்டி (10 அடி வரை) பிரேதத்தை புதைக்க ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூலிக்கஉத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி மறுநாள் (பால் ஊற்றும்) சடங்கிற்கான கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago