மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் கரும்பு அரவையைத் தொடங்கக் கோரி ஆலை முன் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்குத் தலைமை வகித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி பேசியதாவது:
தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை இதுதான். மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆலைக்காக சாகுபடி நிலங்கள் உள்ளன. ஆலையும், அரசும் இணைந்து விவசாயிகளுக்கு பாக்கி பணம் ரூ.21 கோடி வழங்க வேண்டி உள்ளது. இதை உடனே வழங்க வேண்டும்.
2020–21-ம் ஆண்டுக்கு ஆலை அரவைக்கு 30 ஆயிரம் டன் கரும்பு உள்ளது. மேலும் ஆலையின் எல்கைப் பகுதியில் பதிவு செய்யாத கரும்புகளும் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு ஆலையில் விரைவில் கரும்பு அரவையைத் தொடங்க வேண்டும் என்றார்.
இதில் அனைத்துக் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நல்லமணி காந்தி, அப்பாஸ், மொக்கமாயன், முருகன், கதிரேசன், ரமேசன்செல்வராஜன், போஸ், செந்தில்குமார் உட்பட கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago