மதுரை அருகே பைக் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகில் உள்ள கொண்டையம்பட்டியைச் சேர்ந்த சித்திரைசெல்வன் மகன் சசிகுமார்(22), முருகன் மகன் பாலமுருகன்(22). இவர்களது நண்பர்கள் நவீன்சங்கர்(22), சந் தனக்கருப்பு(19). இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தனர்.

நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே பைக்கில் கொண்டையம் பட்டியில் இருந்து தனிச்சியம் கிராமத்துக்குச் சென்றனர். அய்யனக்கவுண்டன்பட்டி அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சசிகுமார், பாலமுருகன் ஆகியோர் இறந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த நவீன்சங்கர், சந்தனக்கருப்பு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்