கள்ளிக்குடி அருகே உறவினர் கொலை தம்பதி கைது

By செய்திப்பிரிவு

கள்ளிக்குடி அருகே உறவினரை அடித்துக் கொன்ற வழக்கில் கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகிலுள்ள மைடான்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன்(47). அதே ஊரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இருவரும் உறவினர்கள். நேற்று முன்தினம் இரவு தங்கப்பாண்டியன் மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். இதை ஜெயராமன் தட்டிக் கேட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த தங்கப்பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் தாக்கியதில் ஜெயராமன் உயிரிழந்தார். இதையடுத்து தங்கப்பாண்டியன், அவரது மனைவி விஜயலட்சுமி மகன் பாண்டியராஜன், மகள் ராஜலட்சுமி ஆகியோர் மீது கள்ளிக்குடி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். தங்கப்பாண்டியன் (45), விஜயலட்சுமி (39) ஆகியோரை காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி கைது செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்