தனிநபர் வருமானம் 2 மடங்காக உயர்வு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தனிநபர் வருமானம் 2 மடங்காக உயர்ந்துள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை அருகே திருமங் கலத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட் டம் பேரவை மாநிலச் செய லாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத் தலை வர் ஐயப்பன், பொருளாளர் திருப்பதி, துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றியச் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: நாட்டின் முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை முதல்வர் கே.பழனிசாமி மாற்றியுள்ளார். தமிழகத்தின் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குக்கிராமங்களில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை முதல்வர் பழனிசாமி பாதுகாத்துள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் செயல்படும் அரசு சாரா அமைப்பு, சிறந்த நிர்வாகத்தைத் தரும் பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டியுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டது என்று அவர்களால் கூற முடியுமா? திமுக ஆட்சியில் கடும் மின்வெட்டு, பொருளாதார சீரழிவு, நில அபகரிப்பு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு ஆகியவற்றால் தமிழகத்துக்கு அவப்பெயர்தான் கிடைத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தாலும், அதிமுக ஆட்சிக்கு தினமும் பாராட்டுக் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்