மதுரை வடபழஞ்சியைச் சேர்ந்தவர் திருப்பதி(36). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது திருட்டு வழக்கும் நிலுவையில் இருந்தது.
திருப்பதிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சிறை வளாகத்தில் செயல்படும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தோல் நோயும் இருந்ததால், அங்குள்ள கைதிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்தியச் சிறை அலுவலர் இளங்கோ அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக மதுரை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரவீன்குமார் மத்திய சிறைக்கு சென்று விசாரித்தார். கைதி தற்கொலை செய்த இடத்தை ஆய்வு செய்த அவர், சிறைத் துறை டிஐஜி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago