சேலம்: சேலத்தில் நகை கடையின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் சித்தனூர் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (40). இவர் அதே பகுதியில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை 10 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ராஜா உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்து 15 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
மேலும், கடை லாக்கரில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் தப்பியதும் தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago