நாமக்கல்: குமாரபாளையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் கட்டுமானப் பணியை நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தரமாக மேற்கொள்ளப்படுகிறதா, என நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானத்தின் உறுதித் தன்மையை கடப்பாரை கொண்டு சோதனை செய்தார்.
கம்பிகளின் உறுதித் தன்மையையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பணியை தரமாக மேற்கொள்ளும்படி பணியாளர்களுக்கு அறுவுறுத்தினார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago