ஊரடங்கு விதி மீறிய 1,250 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

அரியலூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து, கடந்த அக்.31-ம் தேதி அரியலூர் அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 200 பெண்கள் உட்பட 500 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி கூடியதாக அரியலூர் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல, ஆண்டிமடத்தில் பாமக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற 750 பேர் மீது ஆண்டிமடம் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்