கரூரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அச்சங்க மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா நெருக்கடி, பெருந் தொற்று காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுத்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழக்கமான 20 சதவீத போனஸ் என்பதற்குப் பதிலாக 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் பணி நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்பதை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.5-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்படும்.
குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் நவ.26-ம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago