இருளர் பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்களை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு இருளர் பழங்குடி ஊராட்சிகள் மன்ற தலைவர் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் செல்வகுமார்தலைமையில் பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில், “தி.மலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் அரியா குஞ்சூர் ஊராட்சி யில் உள்ள சின்னகல்தாம்பாடி மற்றும் பெரியகல்தாம்பாடியில் 300-க்கும் மேற்பட்ட பட்டியலினத் தவர்கள் மற்றும் பழங்குடி இருளர் இன மக்கள் குடும்பங்கள் உள்ளன. இவர்கள், வன நிலப்பகுதி வழியாக 3 கி.மீ., தொலைவில் உள்ள அரியாகுஞ்சூருக்கு செல்ல வேண்டும். அவை காப்புக் காடுகளாக இருப்பதால், வன உரிமை சட்டத்தின்படி, சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வழியாக அரியாகுஞ்சூர் கிராம மக்களுக்கு வழங்கி, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்வணக்கம்பாடி ஊராட்சி தேசூர்பாளையம் பகுதி யில் உள்ள இருளர் பழங்குடி யினத்தைச் சேர்ந்த 15 குடும்பங் களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி பழங்குடியினர் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர வேண்டும். கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில் உள்ள பட்டியலினத்தவர் மற்றும் இருளர் குடியிருப்புகளுக்கு சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
தி.மலை மாவட்டத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு வளர்ச்சி திட்டத்தின் மூலம் கூடுதல் நிதி உதவி ஒதுக்கீடு செய்து சிறப்பு கிராம ஊராட்சியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வர்களை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago