சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் கைது

By செய்திப்பிரிவு

கோவையை சேர்ந்த 9 மற்றும் 10 வயதுடைய சிறுமிகள், அதே பகுதியிலுள்ள பள்ளியில் நான்கு, ஐந்தாம் வகுப்புகளில் படித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 26-ம் தேதி வீட்டில் இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 14, 15 வயதுடைய சிறுவர்கள் விளையாடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். இருவரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக மகள்கள் விளையாட செல்லாமல் இருந்தது குறித்து பெற்றோர் கேட்டபோது, நடந்த சம்பவத்தை 10 வயது சிறுமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர். 18 வயது பூர்த்தியாகாதவர்கள் என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்‌. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்