தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய மின்னணு கணிப்பொறி பலகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த பயிற்சி முகாம் பல்கலைக்கழக கலைரயங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் என்.குமார் தலைமை வகித்து பேசும்போது, "வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புரட்சி, வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகளை மாணவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய மின்னணு கணிப்பொறி பலகை மூலமாக கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, செக்யூர்டு டிஜிட்டல் பேடு மூலமாக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து, தேர்வுகளை நடத்தி மதிப்பீடு செய்யும் கல்விமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய உயர் கல்வித் திட்ட நிதி நிறுவன வளர்ச்சி நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்பயிற்சியில், முதற்கட்டமாக பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 28 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின், ஆசிரியர்கள் மாணவர்களை திறம்பட வழி நடத்த வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago