கோவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், ஊழியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து ஆணையர் அ.ரவிக்குமார் கூறும்போது, "தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம், ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வை பரவலாக்கும் வகையில் இணையதளத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் புகார்கள் தெரிவிப்பதற்கு வசதி ஏற்படுத்தியிருந்தாலும், அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியிலும் ஊழல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago