கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில்களில் 10.63 லட்சம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அளித்த ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, கடந்த செப். 7 முதல் சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கிமலையில் இருந்து சென்னைசென்ட்ரலுக்கும் ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன.இதுவரையில் மொத்தம் 10 லட்சத்து 63,416 பேர் பயணம் செய்துள்ளனர்.

கடந்த 29-ம் தேதியில் மட்டும் 30,515 பேர் பயணம் செய்துள்ளனர். க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 19,607 பேர் பயணம் செய்துள்ளனர். க்யுஆர் வசதியை பயன்படுத்தும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டநெரிசல் இன்றி வசதியாக செல்லும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளன.

இதேபோல், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும்மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் சுரங்கப்பாதைகளில் மக்கள் வந்துசெல்ல வசதியாக இருக்கின்றன. கரோனா தொற்றை தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்