நவ.10-ல் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

By செய்திப்பிரிவு

அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் குறைதீர் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள குறைகள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இக்கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது.

எனவே, உறுப்பினர்கள் தங்களது குறைகள், பிரச்சினைகளை 8903766548 என்றவாட்ஸ்-அப் எண்ணில் வரும் 6-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என, அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்