கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு அருகே மழவராயநல்லூர் ஊராட்சியில் ஈசன் பாசன வாய்க் கால் மற்றும் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது.
இந்த வாய்க்கால் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் செடி, கொடி வளர்ந்து தூர்ந்துபோனது. இத னால் இந்த வாய்க்காலில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் செல்லும்போது வடிவதற்கு வழியில்லாமல் பாசன விளைநிலங்கள் மூழ்கிவிடும். இதனால் விவசாயிகள் தொடர்ந்து வேதனை அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழகஅரசின் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வந்திருந்தார். அப்போது மழவராயநல்லர் ஊராட்சி மன்ற நிர்வாகம், விவ சாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஒருங்கிணைந்து அவரை சந்தித்து ஈசன் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இதைத்தொடந்து கடந்த சில நாட்களாக ஈசன் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணி துவங்கும்போது மழவராயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிருந்தாவதி வரதராஜன், முஷ்ணம் ஒன்றியக் குழு தலைவர் லதா ஜெகஜீவன்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த வாய்க்கால் தூர்வாரப் படுவது மகிழ்ச்சியை ஏற்படுத் தியுள்ளதாக அப்பகுதி விவசா யிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago