புதுச்சேரியின் தனித்தன்மையை காக்க உயிர் தியாகம் செய்யத் தயார் என்று முதல்வர் நாராய ணசாமி தெரிவித்தார்.
நாடு முழுவதும் பிரிட்டிஷ் ஆட் சிக்குள் இருந்தபோது புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரெஞ்சு ஆட்சியில் இருந்து கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலை அடைந்தது. அதன்படி புதுச்சேரி அரசு சார்பில் விடுதலை நாள் விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்.
பின்னர் விடுதலை நாள் உரை யில் முதல்வர் நாராயணசாமி பேசி யதாவது:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதஇடஒதுக்கீடு வழங்க நடவடிக்கைஎடுத்துள்ளோம். புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி யைச் சேர்ந்தவர்களுக்கு 25சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் 4 சதவீத இடஒதுக்கீடு பெறவும்,உயர்க்கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீடு பெறவும், உயர்நீதிமன்ற பதவிகளில் 4 சதவீத இடஒதுக்கீடுபெறவும் அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.
திருக்காஞ்சியில் சங்கராபரணி பாலம் விரைவில் திறக்கப்படும். ரூ.23.60 கோடியில் காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணி ஜனவரிக்குள் முடிவடைந்து திறக் கப்பட உள்ளது. அதேபோல் உப்பனார் பாலம், கடற்கரை சாலையில் கட்டப்படும் நகராட்சி கட்டிடம்,முருங்கப்பாக்கம் கைவினை கிரா மத்தில் கட்டப்பட்டு வரும் பிரெஞ்சு தமிழ் கிராமம், அரிக்கன்மேடு வரலாற்று சிறப்பை பறைசாற்றும் அருங்காட்சியகம் ஆகியவை விரைவில் திறக்கப்பட உள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுகாதார பிரிவின் கீழ் நவீன கழிவறைகள் மற்றும் நடமாடும் கழிவறைகள் ரூ.2.75 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளன. அண்ணா திடல் ரூ.12.19 கோடிசெலவில் சிறு விளையாட்டரங் கமாக மாற்றப்படும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகை யில் பழைய சிறை வளாகம், பழைய துறைமுகம், நேரு வீதி – ஆம்பூர் சலை சந்திப்பு, ஆம்பூர் சாலை – ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பு, ரயில் நிலையம், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள காலியிடம், ஏஎப்டி மைதானம், அவ்வை திடல், மணிமேகலை பள்ளி ஆகிய 10 இடங்களில் ரூ.15 கோடி செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க பூர்வாங்க திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் 7.30 லட்சம் கனமீட்டர் மணற்பரப்பை தூர்வாரும் பணி ரூ.33 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற் கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு இறுதி நிலையில் உள்ளது.
பயன் கருதாத பலரது தியாகத்தால் இந்த விடுதலை கிடைத்துள் ளது. விடுதலையின் பயன்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது தியாக தலைவர்களின் கனவு. அதை நிறைவேற்றி தருவது எங்களது கடமை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எத்தகைய இடையூறு கள் வந்தாலும் அதனை முறியடித்து மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காகவும் புதுச்சேரியின் தனித்தன்மையை உரிமைகளை பாதுகாக்கவும் உயிர் தியாகம் செய்யவும் தயாராக உள்ளதாக சூளுரைக்கிறேன். வரும் காலத்திலும் இதே உறுதி யோடு செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
விழாவில் சபாநாயகர் சிவக் கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், எம்பிகள் வைத் திலிங்கம், கோகுலகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago