விபத்து, குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரிங் ரோடு வண்டியூர் விலக்கில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள் ளனர்.
மதுரை-விரகனூர் வட்டச்சாலை (ரிங்ரோடு) வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மதுரை, திருச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்வோர், ராமநாதபுரம், ராமேசுவரம் செல்வோர் என ஏராளமானோர் இச்சாலையைப் பயன்படுத்துகின்றனர்.
பகல் நேரத்தைவிட இரவில் ஏராளமான கன ரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகப் பகுதிக்குச் செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருவதால் இச்சாலையில் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டிய அவ சியம் ஏற்பட்டுள்ளது.
இச்சாலையில் பாண்டி கோயில் சிக்னலைக் கடந்து சென்றால் சுமார் அரை கிலோ மீட்டரில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கிருந்து சிறிது தூரத்தில் வண்டியூர், மஸ்தான்பட்டி விலக்குப் பிரிகிறது. இவ்விடத்தில் மதுரை-திருமங்கலம், மஸ்தான்பட்டி- வண்டியூர் சாலைகள் பிரிகின்றன.
இந்த நான்குமுனை சந்திப்பில் 2 ஆண்டுகளுக்கு முன் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்களும் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதனால் அண்ணா நகர், யாகப்பா நகர் பகுதியில் ஓரளவுக்கு குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதேநேரம் வண்டியூர் விலக்கில் இரவு நேரத்தில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மாலை 6 மணிக்கு மேல் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்க வேண்டி உள்ளது. காரணம் அப்பகுதியில் மின் விளக்கு வசதியில்லை.
போலீஸார் தடுப்பு வேலிகளை அமைத்துக் கண்காணித்தாலும், தூரத்தில் வரும் வாகனங்களைக் கணிக்க முடியவில்லை. கண் காணிப்புக் கேமராவில் இரவில் காட்சிகள் சரியாகப் பதிவாவ தில்லை எனப் போலீஸார் தெரி வித்தனர். இந்தச் சாலையில் அண்மையில் நடந்த விபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட சிலர் சிக்கினர்.
விபத்து மற்றும் குற்றச் செயல் களைத் தடுக்க இப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என மாநகர் காவல் துறை சார்பில் மாநகராட்சி நிர் வாகத்துக்குக் கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் உதவி ஆணையர் லில்லிகிரேஸ் கூறுகையில், ‘இந்த இடத்தில் உயர் கோபுர மின்விளக்கின் அவ சியம் கருதி மாநகராட்சி நிர்வா கத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம். அதற்கான முயற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறோம்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago