மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள சூலப்புரத்தைச் சேர்ந்தவர் முனியப்பன்(33). இவரும், அதே ஊரைச் சேர்ந்த கணேசனும் எழுமலையிலுள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்க்கின்றனர். கடந்த 31-ம் தேதி மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
சூலப்புரம்-செல்லையாபுரம் சாலையில் சென்றபோது, அவர் களை வழிமறித்து தாக்கிய மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 2 மொபைல்போன்கள், ரூ.1,250-ஐ பறித்துவிட்டுத் தப் பினர்.
இது தொடர்பாக டி.ராம நாதபுரம் போலீஸார் நடத் திய விசாரணையில், வழிப் பறியில் ஈடுபட்டவர்கள் செல்லையாபுரத்தைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் நவ நீதன்(29), கடவுள் மகன் தங்கப் பாண்டி(35) எனத் தெரிய வந் தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago