மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விஜயன் மனைவி விஜயலட்சுமி(57). வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருந் தாளுநராகப் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகனுடன் மோட்டார் சைக் கிளில் மதுரைக்குச் சென்று விட்டு வாடிப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பஸ் நிறுத்தம் முன் சென்றபோது, அவரது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் விஜயலட்சுமியின் சேலை சிக்கியுள்ளதாகக் கூறி, வாகனத்தை நிறுத்தினர். 3 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பினர். வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago