தமிழ்நாடு தினத்தையொட்டி மதுரையில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மதுரையில் அனுமதியின்றி தமிழன்னை சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழ்புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பேரறிவாளன் தலைமையில் பல்வேறு அமைப் பினர் நேற்று காலை மதுரை தமுக் கம் மைதானம் அருகிலுள்ள தமி ழன்னை சிலை முன் திரண்டனர்.

தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்த பின்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அங்கிருந்த தல்லாகுளம் போலீஸார், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கூட்டம் நடத்தக் கூடாது என எச்சரித்தனர். இதையேற்க மறுத்த பேரறிவாளன் உள்ளிட்டோர் ஆர்ப் பாட்டத்தைத் தொடங்கினர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் அவர்களை தடுக்க முயன்ற போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பேரறி வாளன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீதா.பாண்டி யன், தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப் பித்தன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் மருது, மே-17 இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிட்டு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் மணிபாபா, ஆதித்தமிழர் கட்சி நிதிச் செயலாளர் விடுதலை வீரன் உட்பட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்