தீபாவளி பண்டிகையையொட்டி நெரிசலைத் தவிர்க்க திருச்சி கோட்டை பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு தடையை மீறினால் நடவடிக்கை என காவல் துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி நெரிசலைத் தவிர்ப்பதற்காக திருச்சி கோட்டை பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ஜெ.லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கோட்டை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நவ.2-ம் தேதி(இன்று) முதல் 14-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இருசக்கர வாகனங்களை நிறுத்த ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளிக்கும், பனானா லீப் உணவகத் துக்கும் இடையிலுள்ள மாநகராட்சி மைதானம், யானைக்குளம் மாநகராட்சி மைதானம், பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4 சக்கர வாகனங்களை நிறுத்து வதற்கு பழைய குட்ஷெட் சாலை யில் எப்எஸ்எம் அருகிலுள்ள ரயில்வே மைதானம், கோட்டை ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம், பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

அதேபோல, பழைய மதுரை சாலை(ராமகிருஷ்ணா மேம்பாலம் முதல் காந்தி சிலை வரை), மேலரண் சாலை(தெப்பக்குளம் தபால் நிலையம் முதல் இப்ராஹிம் பூங்கா வரை), கல்லூரி சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த முற்றிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர, மற்ற இடங்களில் எந்த விதமான வாகனங்களையும் நிறுத் தக்கூடாது. மீறி நிறுத்தினால், அந்த வாகனங்கள் மீது போக்குவரத்து காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகளோ, பொதுமக்களோ போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடை களை அமைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்