தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று(நவ.2) முதல் 14-ம் தேதி வரை பெரியகடை வீதி, சின்னக் கடை வீதி, என்எஸ்பி சாலை, நந்தி கோயில் தெருவில் ஆட்டோக்கள், கார்கள் செல்ல அனுமதி கிடையாது. வடக்கு ஆண்டாள் வீதியில் சாலையோரமாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு, வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் வழியாக கல்லூரி சாலை வந்து செல்லவேண்டும். திரும்பி வரும்போது சத்திரம் பேருந்து நிலையம், பட்டர்வொர்த் சாலை வழியாக வந்து, வடக்கு ஆண்டாள் வீதியில் சாலையோரமாக ஆட்டோக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். பாபு சாலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சின்னக்கடை வீதி, கிலேதார் சாலை வழியாக உள்ளே வரக்கூடாது. பாபு சாலையில், சாலையோரமாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டும் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago