டெல்டாவில் விவசாய நிலங்களை புதிய மனைகளாக மாற்ற தடைவிதிக்க வேண்டும் சிவசேனா மாநில செயற்குழு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை புதிய மனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.

சிவசேனா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எம்.ரவிச்சந்திரன் தலைமையில் நாகையில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.ராஜன், அமைப்பாளர் பாலாஜி, துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேலன் வரவேற்றார். கூட்டத்தில், கரோனாவை எதிர்த்து போராடுவதில் மிகச் சிறப்பாக செயல்படும் தமிழக அரசை பாராட்டுவது. இந்தியர்களின் பாரம்பரிய உரிமைமிக்க கச்சத்தீவை உடனடியாக மீட்க மத்திய அரசை வலியுறுத்துவது.

டெல்டா மாவட்டங்கள் பாது காக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாய நிலங்களை புதிய மனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வரிவிதிப்பு முறைப்படி வாட கையை உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநிலச் செயலாளர் முனீஸ்வரன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மாரியப்பன், மத்திய மண்டல அமைப்புச் செயலாளர் நாகையா, மாநில இணைச் செயலாளர் மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய மாநிலச் செயலாளராக சரவணன் நியமிக்கப்பட்டார். முடிவில், மாவட்டச் செயலாளர் அன்பு நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்