நவ.5 ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் ஆதரவு

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 5-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண் முகம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் நாடு முழுவதும் நவம்பர் 5-ம் தேதி சாலைமறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. இந்தஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையாக பங்கேற்கும். இவ்வாறு சண்முகம் கூறியுள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்