பாவூர்சத்திரம் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. மொத்த வியாபாரிகள் காய்கறிகளை ஏலத்தில் வாங்கிச் சென்று சில்லறை விலைக்கு விற்பனை செய்கின்றனர். கடந்த ஒரு மாதமாக வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ ரூ.90 வரை விற்பனையானது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் 70 வரை விற்பனையாகிறது.

சின்ன வெங்காயம் ரூ.70 முதல் 100 வரையும், உருளைக்கிழங்கு ரூ.30 முதல் 35 வரையும் விற்பனையாகிறது. கத்தரிக்காய் ரூ.20 முதல் 25 வரையும், தக்காளி ரூ.8, வெண்டைக்காய் ரூ.5 முதல் 7 வரையும், மிளகாய் ரூ.20 முதல் 25 வரையும் விற்பனையாகிறது. புடலங்காய் ரூ.20, அவரை ரூ.30, நாட்டு சேம்பு ரூ.7 முதல் 10 வரை, சாம்பார் வெள்ளரி ரூ.10, பூசணிக்காய் ரூ.5, சுரைக்காய் ரூ.5 என்ற விலையில் விற்பனையாகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “பாவூர்சத்திரம் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே உள்ளது. வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகள் தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக வியாபாரம் மந்தமாகவே உள்ளது” என்றனர்.

வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகள் தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்