‘குப்பையின் மறுபக்கம்’ குறும்படம் தூத்துக்குடியில் நாளை வெளியீடு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் ‘குப்பையின் மறுபக்கம்’ என்ற குறும்பட வெளியீட்டு விழா நாளை (நவ.3) நடைபெறுகிறது. கனிமொழி எம்.பி., குறும்படத்தை வெளியிடுகிறார்.

இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் சோ.அருந்ததி அரசு வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பையை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் பாக்கிய லட்சுமியின் வலது கை துண்டிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நிதியுதவி வழங்கும் விழா மற்றும் ‘குப்பையின் மறு பக்கம்’ விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா நவம்பர் 3-ம் தேதி காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி கலந்து கொண்டு நிதியுதவி வழங்கியும், குறுந்த கடை வெளியிட்டும் பேசுகிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, குறும்பட இயக்குநர் பிராட்வே எஸ். சுந்தர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்