வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

காட்பாடி: காட்பாடி அருகே ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நவீன்குமார் (34). இவர், நேற்று முன்தினம் ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு விருதம்பட்டு பகுதிக்கு வந்தார். அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி நவீன்குமாரிடம் இருந்து ரூ.1,200 பணத்தை பறித்துச்சென்றார்.

இதுகுறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் நவீன்குமார் புகார் செய்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட பழைய காட்பாடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்