திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அப்துல்கலாம் ஆட்டோ சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா மற்றும் கலாம் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
சங்கத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் முருகன், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிரத்தினம், சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் நந்தினிதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்போது நந்தினிதேவி பேசும்போது, “மக்களுக்காக 24 மணி நேரமும் உதவக் கூடியவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். நீங்கள் அனைவரும், மக்களின் அன்பையும், அரவணைப்பையும் பெற வேண்டும். அவர்களிடம் அன்பாக பழகி, அவர்களை பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்ப்பது உங்களது கடமையாக கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கும், சங்கத்துக்கும் பெருமை” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago