காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே மத்திய பாதுகாப்புப்படை வீரர் வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் (40), இவர், மத்திய பாதுகாப்புப்படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (34), தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி நெமிலியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு மகனுடன் ராஜலட்சுமி சென்றார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் ராஜலட்சுமி அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago