சோளிங்கர் அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் காணிக்கை பணம், அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை யினர் கூறியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மகேந்திர வாடி ஏரிக்கரையோரம் மதகு காத்த அம்மன் கோயில் உள்ளது. அமாவாசை தினங்களில் இந்த கோயிலில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதில், சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய் வார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயில் அர்ச்சகர் சிவா (23) என்பவர் கோயிலை மூடிவிட்டு சென்றார்.
நேற்று காலை வந்து பார்த்தபோது கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அர்ச்சகர் சிவா அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோயில் வளா கத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப் பட்டு காணிக்கை பணம் திருடுப் போயிருந்தது தெரியவந்தது.
மேலும், அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்கத்தாலி, கோயில் வளாகத்தில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அதன் ஹார்டிஸ்க்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பாணாவரம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago