கோவை வழியாக டிசம்பர் 20-ம்தேதி இயக்கப்படும் பாரத தரிசனரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் இதுவரை 370-க்கும் மேற்பட்ட யாத்திரைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப் பட்டுள்ளன.
எனவே, மனச்சோர்வில் இருக்கும் மக்கள் தரிசனம் செய்யும் வகையில் மீண்டும் ஐஆர்சிடிசி சிறப்பு ரயிலை இயக்க உள்ளது.
மத்திய அரசின் கரோனா தடுப்பு ஏற்பாடுகளுடன் இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இதற்காக வரும் டிசம்பர் 20-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, போத்தனூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும். இந்த யாத்திரையில் குவாலியர் நகரின் அழகான கோட்டைகள், உலகப் புகழ் பெற்ற கஜூராஹோ சிற்பங்கள், ஜான்சியில் உள்ள கோட்டை, கோயில்கள், விதிஷாவில் உள்ள சாஞ்சி ஸ்தூபி, ஹலாலி அணை, கோபாலில் உள்ள பிம்பேட்கா குகை, போஜ்பூர் சிவாலயம் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம். 10 நாட்கள் கொண்ட இந்த பயணத்துக்கு ரூ.10,200 கட்டணமாகும்.
இதில், உணவு, தங்குமிடம், வாகன செலவுகள் அடங்கும். முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி-ன்கோவை அலுவலகத்தை 90031 40655, 8287931965 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago