தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.500 ஊதியமாக வழங்க வேண்டும். தீபாவளிப் பண்டிகைக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் கே.பழனிசாமி இந்த விவகாரத்தில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தர வேண்டும். 2001-ம் ஆண்டு வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தினமும் ரூ.76.85 ஊதியமாக பெற்றுவந்தனர். அப்போது பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5-ஐ, வட்டியுடன் முழுமையாக திருப்பித் தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்