வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், குனியமுத்தூரில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்கவும், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு தாமதமின்றி சான்றிதழ்களை வழங்கவும், மழைக் காலத்தில் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை(1077) தொடர்பு கொள்வோருக்குஉடனடியாக தேவைப்படும் உதவிகளை செய்யவும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்