கோவை இருகூர் அருகேயுள்ள அத்தப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் நாகமணி(47). சிவில் சப்ளை குடோனில் ஊழியராக பணியாற்றிவருகிறார். இவரும், மற்றொரு அரசு ஊழியரான ராமு என்பவரும் இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டி சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்தனர். அப்போது ராமுவுக்கு செல்போன் அழைப்பு வந்தது.
இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ராமு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து வந்த இருவர் நாகமணியிடம் இருந்த கைப்பை, ராமுவின் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். அந்த கைப்பையில் ரூ.20 ஆயிரம் தொகை, 6 பவுன் நகை இருந்தது. நாகமணி அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago