மூட்டைப் பூச்சி மாத்திரையால் விபரீதம் மூச்சுத்திணறி தாய், மகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோவை நல்லாம்பாளையம் அருகேயுள்ள ராமசாமி நகரைச் சேர்ந்தவர் சண்முகம்(75). இவரது மனைவி பிரேமகுமாரி(70). இவர்களது மகள் அனுராதா(40), கணவர்முரளி, இவர்களது மகன் ஆகியோர்ஒரே வீட்டில் வசித்துவந்தனர்.

நேற்று காலை அனுராதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறிது நேரத்தில் பிரேமகுமாரியும் உயிரிழந்தார். மூச்சு விட சிரமப்பட்ட சண்முகம்அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த துடியலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

போலீஸார் கூறும்போது, “சண்முகம் தங்கும் அறையில் மூட்டைப்பூச்சிகளை அழிக்க, அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை வாங்கி வைத்துள்ளனர்.மாத்திரையில் இருந்து வெளியேறிய நெடியின் காரணமாக அனுராதாவுக்கும், பிரேமகுமாரிக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர். முரளி மற்றும் அவரது மகனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்