கோவை சீரநாயக்கன்பாளை யத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் மதன்குமார்(28). இவர், கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார்வங்கியில் ஊழியராக பணியாற்றிவந்தார். மதன்குமார் கடந்த 29-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸார் கூறும்போது, “மதன்குமார் கடந்த சில வருடங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் ஆரம்பத்தில் பணம் கிடைத்துள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்த மதன்குமார், கடந்த சிலமாதங்களில் லட்சக்கணக்கில் தொகையை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago