கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடந்த வாரம் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையைத் தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த பூக் கழிவுகள், பூஜைப் பொருட்கள் கழிவு போன்றவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டிச் சென்றனர். இதுவரை அகற்றப்படாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து ஆவாரம்பாளை யத்தைச் சேர்ந்த நவீன்குமார் கூறும்போது, ‘‘ஆவாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி தூய் மைப் பணியாளர்களால் குப்பை அகற்றப்படவில்லை. ஆவாரம்பாளை யம் பிரதான சாலை, மகாத்மா காந்தி சாலை, காமதேனு நகர், இளங்கோ நகர், வள்ளி நகர், ஷோபா நகர் சாலை, பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் குப்பைத் தொட்டி நிரம்பி, சாலை களில் சிதறிக் கிடக்கிறது. நீண்ட நாட்கள் ஆனதால், குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டி யன் கூறும்போது,‘‘ பண்டிகைக் காலத்தில் மாநகரில் தேங்கிய குப்பையை விரைவில் அகற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவாரம்பாளையம் பகுதியில் தேங்கிய குப்பை விரைவில் அகற்றப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago