கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சியின் 37 மற்றும் 57-வது வார்டுகளுக்குட்பட்ட ஹோப்காலேஜ் சிக்னல் சந்திப்பில் இருந்து மசக்காளிபாளையம் வரை ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். ஏராளமான உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளன. இங்கு மூடப்பட்ட சாக்கடையின் மேல் பகுதியை ஆக்கிரமித்து, கடைகளின் அடுப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து சமைப்பது, தேநீர் போடுவது போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. சமைக்கப்படும் உணவுகளின் கார துகள்கள் வாகன ஓட்டுநர்களின் கண்களில் பட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுவதால், கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வழிந்தோடுகிறது. மூடப்பட்ட சாக்கடையின் மீது அமைக்கப்பட்டுள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago