சென்னையில் இதுவரை 1 லட்சத்து 99 ஆயிரத்து 173 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 3 ஆயிரத்து 639 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 280 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதமாகும்.
சென்னை மக்களிடம் தற்போது அலட்சியப் போக்கு ஏற்பட்டுள்ளது. 50 சதவீதம் பேர் மட்டுமே முகக் கவசம் அணிகின்றனர். தொற்றுக்கு இதுவரை மருந்து கடைபிடிக்கப்படாத நிலையில், முகக் கவசம் மட்டுமே தீர்வு என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago